சிரியாவின் எண்ணெய்யை அமெரிக்கா கைக்கொள்ளல்

Syria

சிரியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க படைகள் தமது கட்டுப்பாட்டுள் எடுப்பதாகவும், அது சர்வதேச காடைத்தனம் என்றும் கூறுகிறது ரஷ்யா.
.
சிரியாவின் கிழக்கே உள்ள Deir el-Zour என்ற இடத்தில் பெருமளவு எண்ணெய் வளம் உள்ளது. அப்பகுதியில் ISIS குழு ஆட்சி செய்த காலத்தில், அக்குழு எண்ணெய் நிலையங்களையும் தம் கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது. ISIS குழு விரட்டப்பட்ட பின் Kurdish ஆயுத குழு இவ்விடங்களை தமது கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது.
.
ஆனால் தற்போது துருக்கியின் Kurdish குழு மீதான தாக்குதல் காரணமாக Kurdish குழு Deir el-Zourபகுதியை கட்டுப்பாட்டுள் வைத்திருக்க முடியாத நிலையில் உள்ளது. அதனால் அமெரிக்க படைகள் இவ்விடத்துக்கு நகர்ந்து அங்குள்ள எண்ணெய் நிலையங்களை தமது கட்டுப்பாட்டுள் எடுத்துள்ளன. இதையே வன்மையாக கண்டிக்கிறது ரஷ்யா.
.
சர்வதேச சட்டப்படி இவ்விடத்து எண்ணெய் வள சொத்துக்கள் சிரிய அரசுக்கே சொந்தம் என்கிறது ரஷ்யா.
.
ISIS குழுவை பிடிக்க என்று சென்ற அமெரிக்கா அங்குள்ள எண்ணெய் நிலையங்களை பிடிப்பது சட்டத்துக்கு விரோதமானது என்கிறார் ISIS குழுவுக்கு எதிராக இராணுவ அணியை திரட்டிய அமெரிக்க பிரமுகர் Brett McGurk.
.