அஸ்ரேலியாவின் Qantas Airlines சிட்னி (Sydney) முதல் அமெரிக்காவின் நியூ யார்க் வரையான 19 மணித்தியால விமான சேவையை 2025ம் ஆண்டில் ஆரம்பிக்க உள்ளது. அவ்வாறு சேவை இடம்பெறின் இதுவே உலகின் அதிகூடிய நேர விமான பயணமாகும்.
இதற்காக Qantas மொத்தம் 12 புதிய Airbus A350 வகை விமானங்களை வடிவமைத்து வருகின்றது.
மொத்தம் 300 பயணிகளை காவக்கூடிய இந்த விமானம் 238 பயணிகளை மட்டுமே காவும். இதில் 6 first class ஆசனங்களும், 52 business class ஆசனங்களும், 40 premium economy ஆசனங்களும், 140 economy ஆசனங்களும் இருக்கும்.
தற்போது உலகின் அதிகூடிய நேர விமான சேவையாக சிங்கப்பூர் விமான சேவையின் சிங்கப்பூர்-நியூ யார்க் (JFK) சேவை உள்ளது. சிங்கப்பூர்-நியூ யார்க் சேவை 18:05 மணித்தியாலங்கள் எடுத்தாலும், நியூ யார்க்-சிங்கப்பூர் சேவை காற்று (headwind) காரணமாக 18:40 எடுக்கின்றது.