சிங்கப்பூர் சிறை போகும் சுவிஸ் வாங்கியாளர்

1MDB

சிங்கப்பூர் அரசு 1MDB என்ற விடயம் தொடர்பாக விசாரணைகள் நடாத்தி வந்திருந்தது. அதன் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டு பிரசையும், சுவிஸ் நாட்டு வங்கியான Falcon Private Bankகின் சிங்கப்பூர் கிளையில் பணிபுரிந்தவருமாகிய Jens Fred Sturzenegger குற்றாவளியாக காணப்பட்டு உள்ளார். புதன்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றில் கூறப்பட்ட கூறில், இந்த சுவிஸ் வாங்கியாளர் 1MDB தொடர்பாக பொய்யான தகவல்களை சிங்கப்பூர் விசாரணைகளுக்கு வழங்கியுள்ளார். இவருக்கு 28-கிழமை சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் இவருக்கு $89,000 தண்டமும் விதிக்கப்பட்டு உள்ளது.
.
1Malaysia Development Berhad (1MDB) என்ற முதலீட்டு திட்டம் தற்போதைய மலேசிய பிரதமர் Najib Razakகினால் 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம், முதல் ஆறு வருட செயல்பாட்டின் பின் சுமார் $11 பில்லியனை இழந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் The Wall Street Journal என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்தின்படி இந்த திட்ட வங்கி கணக்கில் இருந்து சுமார் $700 மில்லியன் பிரதமர் Najibபின் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு இரகசியமாக மாற்றப்பட்டு உள்ளது.
.
இந்த ஊழல் உண்மையை அம்பலப்படுத்தியது வெள்ளை இன பத்திரிகையாளர் என்பதால், ஆத்திரம் கொண்ட மலேசிய பிரதமர் Najib வெள்ளையர்கள் மலேசியா விடயங்களில் தலையிட வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
.
2016 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த Panama Paperரில் மலேசிய பிரதமரின் மகன் Mohd Nazifuddin Najib பெயரும் இருந்தது.
.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவும் இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்து இருந்தது. இந்த விடயத்தில் தொடர்புகொண்ட வாங்கி கணக்குகளை அமெரிக்காவில் முடக்க முனையும் அமெரிக்க அரசு, இவ்விடயத்தின் முதல் சந்தேகநபரை “Malaysian Official 1” என்று நாமமிட்டு உள்ளது.
.