சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில்

சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில்

2024ம் ஆண்டுக்கான Henley கடவுச்சீட்டு சுட்டியில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை கொண்டவர்கள் 195 நாடுகளுக்கு அல்லது இடங்களுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.

இந்திய  கடவுச்சீட்டு 83ம் இடத்தில் உள்ளது. இந்திய கடவுச்சீட்டை கொண்டவர்கள் 58 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்கலாம்.

இலங்கை கடவுச்சீட்டு 95ம் இடத்தில் உள்ளது. இலங்கை கடவுச்சீட்டை கொண்டவர்கள் 44 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்கலாம். 

2006ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு 74ம் இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து 2021ம் ஆண்டு 107ம் இடத்தை அடைந்தது. மீண்டும் வலு பெற்ற இலங்கை கடவுச்சீட்டு 2022ம் ஆண்டு 102ம் இடத்தையும், 2023ம் ஆண்டு 100ம் இடத்தையும், அடைந்திருந்தது.

பூட்டான் 89ம் இடம் (விசா இன்றி 52 நாடுகள்)
பங்களாதேஷ் 99ம் இடம் (விசா இன்றி 40 நாடுகள்)
நேபாள் 100ம் இடம் (விசா இன்றி 39 நாடுகள்)
பாகிஸ்தான் கடவுச்சீட்டு 102ம் இடம் (விசா இன்றி 33 நாடுகள்)

முதல் 10 இடங்களில் உள்ள கடவுச்சீட்டுகள்:
1. Singapore (195 நாடுகள்)
2. France, Germany, Italy, Japan, Spain (192 நாடுகள்)
3. Austria, Denmark, Finland, Ireland, Luxembourg, Netherlands, South Korea, Sweden (191 நாடுகள்)
4. Belgium, New Zealand, Norway, Switzerland, United Kingdom (190 நாடுகள்)
5. Australia, Portugal (189 நாடுகள்)
6. Greece, Poland (188 நாடுகள்)
7. Canada, Czechia, Hungary, Malta (187 நாடுகள்)
8. United States (186 நாடுகள்)
9. Estonia, Lithuania, United Arab Emirates (185 நாடுகள்)
10. Iceland, Latvia, Slovakia, Slovenia (184 நாடுகள்)