சிங்கப்பூர் அல்லது இந்தியாவில் பெரியதொரு படைத்தளம் ஒன்றை அமைக்கும் கருத்தை அமெரிக்காவின் கடற்படை செயலாளர் (US Navy Secretary) Kenneth Braithwaite முன்வைத்துள்ளார். கடந்த செவ்வாக்கிழமை ஆய்வு இடம்பெற்ற அமர்வு ஒன்றின்போதே அவர் இந்த கருத்தை முன்வைத்தார். அவ்வாறான பேச்சுக்கள் எதுவும் தம்முடன் நடாத்தப்படவில்லை என்று சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
தற்போது அமெரிக்காவின் 7 ஆம் படை (7th Fleet) ஜப்பானில் நிலைகொண்டுள்ளது என்றாலும், வளரும் சீனாவை எதிர்க்க அது போதியதல்ல என்ற கணிப்பு அமெரிக்காவுக்கு தோன்றியுள்ளது. அதனால் பசுபிக் சமுத்திரமும், இந்து சமுத்திரமும் சந்திக்கும் பகுதியில் (“crossroads between the Indian and Pacific Oceans”) மேலும் ஒரு தளத்தை அமைக்க விரும்புகிறார் Braithwaite.
“We have to look to our other allies and partners like Singapore, like India, and actually put a numbered flee” என்று Braithwaite கூறியுள்ளார். இந்த படையை 1 ஆம் படை (1st Fleet) என்றும் அவர் அழைத்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் அண்மையில் தாம் அமெரிக்க-சீன ஆயுத போட்டியில் பங்கு கொள்ளப்போவது இல்லை என்று கூறியிருந்தார்.
இந்தியா இதுவரை அமெரிக்க கடற்படை செயலாளரின் கூற்றுக்கு கருது எதையும் தெரிவித்து இருக்கவில்லை.
ஜப்பானில் உள்ள அமெரிக்காவின் 7 ஆம் படையே பசுபிக் கடலின் நடுவே செல்லும் International Date Line முதல் இந்திய-பாகிஸ்தான் எல்லை வரையான பகுதிக்கு பொறுப்பு. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5 ஆம் படை மத்தியகிழக்குக்கும், மேற்கு இந்து சமுத்திரத்துக்கும் பொறுப்பு.