சிங்கப்பூரில் 1.5 மில்லியன் நோயாளர்களின் பெயர், தேசிய அடையாள இலக்கம், முகவரி, பிறந்த திகதி போன்ற தகவல்கள் திருடப்பட்டு உள்ளாதாக வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் 160,000 நோயாளர் உட்கொள்ளும் மருந்து விபரங்களும் கூடவே திருடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
.
.
சிங்கப்பூர் பிரதமரின் விபரங்களும் இந்த திருட்டுள் அடங்கும்.
.
.
SingHealth என்ற சிங்கப்பூரின் மிகப்பெரிய வைத்தியசேவை அமைப்பின் கணனிகளை ஊடுருவியே இந்த தகவல்கள் களவாடப்பட்டு உள்ளன.
.
.
சிங்கப்பூர் அதிகாரிகள் இந்த cyber attack சாதாரண hackerகளின் அல்லது சமூகவிரோத குழுக்களின் செயல்பாடு அல்ல என்றும், இது ஒரு பலமான திட்டமிடலுடன் செய்யப்பட்ட வலுவான தாக்குதல் என்றும் கூறியுள்ளனர்..
.
.
இந்த களவு ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறுள்ளது.
.
.
சிங்கப்பூரின் Smart Nation என்ற திட்டத்தின் கீழ் நோயாளிகளின் தரவுகள் National Electronic Health Recordடில் பதியப்படல் கட்டாயமாக்கப்பட்டது. அங்கிருதே இந்த தரவுகள் களவாடப்பட்டு உள்ளன.
.