சிங்கப்பூரில் ரம்ப்-கிம் சந்திப்பு

Trump

வரும் ஜூன் 12 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்திக்கவுள்ளார். இந்த அறிவிப்பை ரம்ப் இன்று வெளியிட்டுள்ளார்.
.
அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Mike Pompe) இந்த சந்திப்பு நோக்கம் “permanent, verifiable, irreversible, dismantling of North Korea’s weapons of mass destruction” என்றுள்ளார். வடகொரியாவின் தலைவரும் சுயமாகவே அதையே செய்யவுள்ளதாக முன்னர் கூறியுள்ளார். ஆனால் தனது அணுவாயுதங்களை கைவிட, பிரதியுபகாரமாக என்னவெல்லாம் கேட்பர் என்பது தற்போதும் வெளியிடப்படவில்லை.
.
வடகொரியா பெருமளவு பணத்தை எதிர்பார்க்கும் என்று கருதப்படுகிறது. கிழக்கு ஜேர்மனி மேற்கு ஜேர்மனியுடன் இணைத்தபோது மேற்கு நாடுகள் சுமார் $2 டிரில்லியன் பெறுமதியான உதவிகளையும், முதலீடுகளையும் கிழக்கே செய்ததாக கூறப்படுகிறது.
.
அடுத்த மிக முக்கிய விடயம் தென் கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரின் எதிர்காலம். தென்கொரியாவில் சுமார் 35,000 படையினர் நிலை கொண்டுள்ளனர். சட்டப்படி அவர்கள் அங்கு நிலைகொண்டுள்ள காரணம் தென்கொரியாவை வடகொரியாவில் இருந்து பாதுகாப்பதே. இரண்டு கொரியாக்களும் இணைத்த பின் இந்த காரணம் இல்லாதுபோகும். ஆனால் அமெரிக்கா தனக்கு முக்கியத்துவம் கொண்ட ஓர் தளத்தை மூடுமா என்பது கேள்விக்குறியே.
.

தென்கொரியாவில் அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ளதும், அவ்வப்போது அந்த அமெரிக்க படைகள் அங்கே பாரிய இராணுவ பயிற்சிகளை செய்வதும் சீனாவுக்கு விருப்பமில்லாத விடயங்கள்.
.