சிங்கப்பூரில் கார் பதிவுக்கு U$106,000

சிங்கப்பூரில் கார் பதிவுக்கு U$106,000

சிங்கப்பூரில் ஒருவர் கார் போன்ற குடும்ப வாகனம் ஒன்றை பதிவு செய்ய தற்போது சுமார் U$106,000 தேவைப்படுகிறது. இந்த செலவு வாகனத்தை வீதியில் செலுத்த உரிமை கொள்வதற்கான செலவு மட்டுமே.

மிக சிறிய நாடான சிங்கப்பூர் அங்கு வாகன நெரிசலை குறைக்க பாவனையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்துகிறது. வாகனம் ஒன்றை கொண்டிருக்கும் உரிமையை (COE, certificate of entitlement) சிலருக்கு மட்டுமே சீட்டிழுப்பு மூலம் வழங்குகிறது. ஒரு CEO 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

சிங்கப்பூரில் ஒருவர் Toyota Camry Hybrid கார் ஒன்றை கொள்வனவு செய்து, COE பெற்று, வரிகள் அனைத்தும் செலுத்தி பாவனைக்கு எடுக்க  சுமார் U$183,000 தேவைப்படும். ஆனால் அதே காரை அமெரிக்காவில் ஒருவர் $28,855 செலவழித்து பாவனைக்கு எடுக்கலாம்.

சிங்கப்பூர் சுமார் 950,000 வாகனங்களை மட்டுமே பயன்பாட்டுக்கு அனுமதிக்கிறது. பழைய வாகனம் ஒன்று கைவிடப்பட்டால் மட்டுமே அந்த இடத்துக்கு புதிய வாகனம் ஒன்றை செலுத்த அனுமதிக்கப்படும்.

சிங்கப்பூரில் சராசரி குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு U$88,220 மட்டுமே.