சிங்கப்பூர் அந்நாட்டின் அரச ஊழியர்களின் Internet தொடர்புகளை முற்றாக துண்டிக்க முடிவு செய்துள்ளது. அரச அலுவலகங்களில் ஊழியர்கள் தமது கணனிகளின் மூலம் Internet தொடர்புகளை இதுவரை கொண்டிருந்தனர். ஆனால் வளந்துவரும் Internet தாக்குதல் காரணமாக சிங்கப்பூர் இந்த தொடர்புகளை துண்டிக்கிறது.
.
.
Internet தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும் அந்த கணனிகள் தொடர்ந்தும் தம்முள் இணைக்கப்பட்டு இருக்கும். அதனால் அரச கணனிகள் தம்முள் தொடர்ந்தும் தொடர்புகளை கொண்டிருக்கும். வெளி Internet தொடர்புகள் மட்டுமே துண்டிக்கப்படும். சுமார் 100,000 கணனிகள் இவ்வாறு Internet தொடர்புகளை இந்த திட்டத்தில் இழக்கும். ஏற்கனவே முக்கிய பதவிகளில் உள்ளவர்களின் கணனிகள் Internet தொடர்புகளை இழந்துள்ளன.
.
.
மூன்று வருடத்தின் முன் சிங்கப்பூர் பிரமரின் கணனிகள் Internet தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தன.
.
.
கனடாவின் University of Calgary சில கிழமைகளின் முன் Internet பணயம் வைக்கும் தாக்குதல் (ransomware) ஒன்றுக்கு உள்ளாகி, பின் C$20,000 பணயப்பணம் செலுத்தி தமது கணணிகளை தம்வசம் மீண்டது. இவர்களின் கணணி இணைப்புகளுக்குள் தொலைவில் இருந்து புகுந்த தாக்குதல்காரர், இணைப்புகளை தம்காசம் எடுத்துவிட்டனர். அதனால் Calgary பல்கலைக்கழக உறுப்பினர் தமது கணணிகளை பயன்படுத்த முடியாது தவித்தனர்.
.