சிங்கப்பூரின் அடுத்த சனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஆளும் கட்சியான People’s Action Party (PAP) கட்சியின் அங்கத்தவராக பல பதவிகளை வகித்திருப்பினும், சனாதிபதி தேர்தல் காலத்தில் PAP அங்கத்துவதை கைவிட்டு கட்சி சார்பு அற்று இருந்தார்.
முன்னாளில் உதவி பிரதமராக இருந்த சண்முகரத்தினம், வயது 66, 70.4% வாக்குகளை பெற்றிருந்தார். இவர் London School of Business, University of Cambridge, Harvard University ஆகிய பல்கலைக்கழகங்களில் கற்றவர்.
சிங்கப்பூர் சனாதிபதி சில அதிகாரங்களை கொண்டிருந்தாலும், பொதுவாக சனாதிபதி பதவி ஒரு சம்பிரதாக பதவியே. பாராளுமன்ற ஆட்சியை கொண்ட சிங்கப்பூரில் பிரதமரே அரசின் தலைவர்.
அண்மைக்காலங்களில் PAP கட்சி மீது சில குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தாலும், அக்கட்சியையே மக்கள் தற்போதும் நம்புகின்றனர். சிங்கப்பூர் பொதுவாக ஊழல், இலஞ்சம் அற்ற பெருமைக்குரிய நாடு. அந்த பன்பை நாட்டியவர் முன்னாள் பிரதமர் லீ குவாங். அவரின் மகனே தற்போதைய பிரதமர்.