இதுவரை காலமும் ஓரளவு நலமான பொருளாதாரத்தை கொண்டிருந்த சிங்கப்பூரும் தற்போது பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகிறது. அந்த நெருக்கடி தற்போது அங்குள்ள வீட்டு உரிமையாளர் தமது வீடுகளை இழக்கும் நிலையையும் உருவாகியுள்ளது.
.
அங்கு இந்த வருடத்துக்கான பொருளாதார வளர்ச்சி 0.0% முதல் 1.0% ஆக மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
.
வங்கி கடன் சுமை காரணமாக bankruptcy ஆகுவோர் தொகையம் அங்கு அதிகரித்து வருகின்றது. அதில் பிரதானமானது வீட்டு கடனுக்கான மாதாந்த தொகையை (mortgage) செலுத்த முடியாதுள்ளோர் வகையே.
.
அங்கு சுமார் 730 சதுர அடி பரப்பளவு கொண்ட மாடி வீடு (condo) சுமார் U$ 1.0 மில்லியனுக்கு விற்பனை ஆகிறது. அதற்கேற்ப முதலையும், வட்டியையும் உள்ளடக்கிய மாதாந்த கட்டுமானமும் அதிகமாக உள்ளது.
.
2015 ஆம் ஆண்டில் 65 குடும்பங்கள் தமது மாதாந்த mortgage தொகையை செலுத்த முடியாமையால் வீடுகளை இழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் அத்தொகை 105 ஆகி, 2017 ஆம் ஆண்டில் 112 ஆகி, 2018 ஆம் ஆண்டில் 156 ஆகியுள்ளது. இந்த வருட முதல் 6 மாதங்களில் மட்டும் அத்தொகை 79 ஆக உள்ளது.
.
அதேவேளை bankruptcy ஆகியோரின் மொத்த தொகையும் அதிகரித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் இத்தொகை 2,932 ஆக இருந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் அது 3,079 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இத்தொகை 1,847 ஆகவுள்ளது.
.
செல்வந்த சீனர்கள் சிங்கப்பூர் வீடுகளை கொள்வனவு செய்வதும் சிங்கப்பூர் வாசிகளுக்கு பாதகமாக அமைத்துள்ளது. இந்த வருட முதல் 8 மாதங்களில் மட்டும் S$5 மில்லியனுக்கும் அதிகமான விலை கொண்ட 76 வீடுகளை சீனர் கொள்வனவு செய்துள்ளனர். அதே காலத்தில் அவ்வகை 75 வீடுகளை மட்டுமே சிங்கப்பூர் வாசிகள் கொள்வனவு செய்துள்ளனர்.
.