பிரித்தானியாவில் அரசராக முடி சூடும் சார்ள்ஸ் அணியும் முடியில் இந்தியாவில் இருந்து எடுத்து செல்லப்பட்ட Koh-i-noor வைரம் இல்லை. சார்ள்ஸின் தாய் எலிசபெத் இராணி தனது முடியில் இந்த வைரத்தை கொண்டிருந்தாலும் சார்ள்ஸ் இதை கொண்டிராமைக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.
ஒன்று இந்த வைரம் இந்தியாவில் இருந்து பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்டது என்பதால் அதை இந்தியா திருப்பி எடுக்க கேட்டுள்ளது என்பதாகும்.
அடுத்த காரணம் இந்த வைரத்தை சூடிய ஆண்கள் அனைவரும் கொடூர மரணத்தை அல்லது வீழ்ச்சியை சந்தித்தவர்கள் என்பதாகும். அதாவது இந்த வைரம் சாபம் கொண்டது என்ற கருத்து பரவ ஆரம்பித்துள்ளது.
Koh-i-noor என்றால் ஒளி மலை (mountain of light) என்று பொருள்படும். இது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியாவின் கிருஸ்ணா ஆற்றோரம் எடுக்கப்பட்டது.
இதை மோகல் (Mughal), பாரசீக, ஆப்கான், சீக்கிய தலைவர்கள் அணிந்து இருந்தனர். இறுதியில் இது Duleep Singh என்ற 10 வயது மாகாராஜாவிடம் இருந்தது. பின் 19ம் நூற்றாண்டின் நடு பகுதில் இந்தியாவை ஆக்கிரமித்து இருந்த பிரித்தானியா இதை கைக்கொண்டது.
Camilaவும் இதை அணியார். இது தற்போது Tower of London நூதனசாலையில் உள்ளது.