அமெரிக்காவின் New Hampshire என்ற மாநிலத்தில் உள்ள Londonderry என்ற நகரத்து உணவகம் ஒன்று வழங்கிய $37.93 பெறுமதியான உணவுக்கு மேலும் $16,000 பணத்தை tips ஆக பெற்றுள்ளது.
Stumble Inn Bar & Grill என்ற உணவகத்தில் ஜூன் மாதம் 12ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்று இருந்தாலும், உணவக உரிமையாளர் பயன்படுத்தப்பட்ட கடன் அட்டை சந்தேகத்துக்கு இடமானதாக இருக்குமோ என்று குழம்பியதால் விசயத்தை உடனே பகிரங்கம் செய்யவில்லை. குறித்த தொகை ஜூன் 21ம் திகதி கடன் அட்டை நிறுவனத்தில் இருந்து கிடைத்த பின்னரே $16,000 tips உண்மை என்பதை உணர்ந்துள்ளார்.
வழமைபோலவே அந்த தொகையை 8 உணவு பரிமாறும் ஊழியர்களும், 4 சமையல் செய்வோரும் பகிர்ந்து கொண்டனர். உரிமையாளர் $37.93 ஐ மட்டுமே பெற்று இருந்தார்..
அமெரிக்காவின் பொருளாதாரத்தை கரோனா பெரிதும் பாதித்து இருந்தாலும், 2020ம் ஆண்டில் என்றும் இல்லாத அளவில் அமெரிக்கர் தானம் செய்துள்ளார்.
2019ம் ஆண்டு, கரோனாவுக்கு முன், அமெரிக்காவில் $448 பில்லியன் பணம் நன்கொடை செய்யப்பட்டு உள்ளது. 2020ம் ஆண்டு, கரோனா காலத்தில், $471 பில்லியன் நன்கொடை செய்யப்பட்டு உள்ளது. அதாவது கரோனா காலத்தில் நன்கொடை 5.1% ஆல் (பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் 3.8%) அதிகரித்து உள்ளது.