சாதாரண குடிமகன் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதால் இந்த மாதம் 26ம் திகதி முதல் சாதாரண குடிமகள் (commoner) ஆகிறார் ஜப்பானிய இளவரசி Mako. சுமார் 4 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இவரின் திருமணம் 26ம் திகதி ஆடம்பரம் இன்றி நிகழவுள்ளது. திருமண பதிவின் பின் தம்பதிகள் அமெரிக்கா சென்று வாழ்வர்.
Mako திருமணம் செய்யவுள்ள 30 வயதுடைய நண்பன் Kei Komuro அமெரிக்காவில் சட்ட படிப்பை பூர்த்தி செய்கிறார். 2017ம் ஆண்டே திருமண பேச்சுக்கள் இடம்பெற்றாலும், Komuro வின் தாய் கடன் வழக்கு ஒன்றில் இருந்ததால் மகனின் விவாகம் இதுவரை இழுபட்டது.
Komuro வின் தாய் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் தனது முன்னாள் ஆண் நண்பனிடம் $36,000 கடன் வாங்கியிருந்தார் என்றும் அதை மீள பெற கடனை வழங்கியவர் வழக்கு தொடர்ந்தார் என்றும் கூறப்பட்டது. தாய் அத்தொகையை அன்பளிப்பாகவே பெற்றதாக வாதாடியிருந்தார்.
இந்த வழக்கு மட்டுமன்றி Miko சாதாரண நபரை விவாகம் செய்வதுவும் அரச குடும்பத்துக்கு விருப்பத்துக்குரியது அல்ல. அதுவும் விவாகம் இழுபட காரணம்.
வரும் 26ம் திகதிக்கு பின் Mako ஜப்பானிய அரச நிகழ்வுகளுக்கு அழைக்கப்படார். அவருக்கு ஒருமுறை மட்டும் சுமார் $1.38 மில்லியன் அரச குடும்பத்தால் வழங்கப்படும்.