இன்று எகிப்து சென்றுள்ள சவுதி அரசர் Salman, சவுதிக்கும் எகிப்துக்கும் இடையே, Tiran நீரிணை மேலாக, பாலம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இவ்விடத்தில் பல பகுதிகள் ஆழம் குறைந்த கடல் என்றாலும் சுயஸ் கால்வாயினூடு செல்லும் கப்பல்கள் பயன்படுத்தும் பகுதி சுமார் 6 km நீளமும் 290 மீட்டர் ஆழமும் கொண்ட கடல் பகுதியாகும்.
.
.
இவ்வகை திட்டம் ஒன்று சவுதியால் 2005 ஆம் ஆண்டிலும், முபாரக் காலத்தில், முன்வைக்கப்பட்டு இருந்திருந்தாலும் அது பின்னர் கைவிடப்பட்டு இருந்தது. அப்போது இவ்வகை பாலம் ஒன்றுக்கு சுமார் $4 பில்லியன் செலவாகும் என்ற கணிப்பிடப்பட்டு இருந்தது.
.
.
இந்த நீரிணை இஸ்ரவேலின் பயன்பாட்டுக்கு உள்ளமை எகிப்து-இஸ்ரவேல் சமாதான உடன்படிக்கையில் உள்ளதால் இஸ்ரவேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
.
.