அண்மைக்காலம் வரை மேற்கின் விருப்பத்துக்குரிய மத்தியகிழக்கு நாடாக இருந்த சவுதி அரேபியா தற்போது மேற்கு நாட்டு நிறுவனங்களால் கைவிடப்பட்டு வருகிறது. துருக்கியில் உள்ள சவுதி தூதுவராகம் சென்ற Jamal Khashoggi என்ற பத்திரிகையாளர் தொலைவானதே இதற்கு காரணம்.
.
இந்த மாதம் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவில் பெரியதோர் முதலீட்டாளர் மாநாடு இடம்பெறவிருந்தது. சவுதி அரசினால் நடாத்தப்படவிருந்த இந்த அமர்வில் பல பெரிய நிறுவனங்கள் பங்குகொள்ள இருந்தன. இந்த அமர்வு Davos of the Desert என்று பலராலும் அழைக்கப்பட்டது.
.
ஆனால் Jamal Khashoggi காணாமல் போன பின்னர் பல மேற்குநாட்டு நிறுவனங்கள் மேற்படி அமர்வில் இருந்து பின்வாங்கி உள்ளன. அமெரிக்காவின் JPMorgan Chanse என்ற நிறுவன CEO James Dimon தானும் பங்கு கொள்ளப்போவது இல்லை என்று இன்று கூறியுள்ளார். ஏற்கனவே Ford Motor நிறுவன Chairman Bill Ford தானும் பங்கு கொள்ளப்போவது இல்லை என்றுள்ளார்.
.
அதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் Jamal Khashoggi கொலைக்கு சவுதி காரணம் என்று நிரூபிக்கப்பட்டால், தாம் சவுதியை தண்டிக்கவுள்ளதாக கூறி உள்ளன. பதிலுக்கு சவுதியும் தாம் தண்டிக்கப்பட்டால் பலமடங்கு பலத்துடன் திருப்பி தாக்கவுள்ளதாக கூறியுள்ளது.
.
அத்துடன் தேவைப்பட்டால் தாம் ஈரானுடனும் இணைந்து செய்யப்படவுள்ளதாகவும் சவுதி பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.
.