சவுதி அரேபியாவில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரச ஆதரவு செய்தி நிறுவனமான Al Arabiya கூறியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்படோரில் billionaire Price Alwaleed bin Talal என்ற இளவரசரும் அடங்குவார்.
.
இளவரசர் Alwaleed தனது Kingdom Holding என்ற முதலீட்டு நிறுவனம் மூலம் பல மேற்கு நாட்டு வர்த்தகங்களில் முதலீட்டு உள்ளவர். News Corp, Time Warner, Citigroup, Twitter, Apple, Motorola, ஆகிய பல நிறுவனங்களில் இவரின் முதலீடுகள் உண்டு.
.
இந்த கைதுகளுக்கு இளவரசர்கள் இடையேயான பதவி போட்டியே காரணம் என்று நம்பப்படுகிறது. சவுதி அரசர் King Salman தனது விருப்பத்துக்கு உரிய மகன் Crown Price Mohammed bin Salman என்பவரின் ஆதிக்கத்தை உறுதி செய்யும் நோக்கிலேயே உள்ளார். தற்போது 32 வயதுடைய இந்த இளவரசிடமே பாதுகாப்பு, வெளியுறவு, பொருளாதாரம் ஆகிய முக்கிய பிரிவுகள் உண்டு.
.
இன்று கைது செய்யப்பட்ட இளவரசர் Alwaleed 2015 ஆம் ஆண்டு தனது Twitterரில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் ரம்ப் மீது “நீ GOP (Republican party) க்கு மட்டுமல்ல, முழு அமெரிக்காவுக்கும் அவமானம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெல்லும் சாத்தியம் இல்லாத நீ அதிலிருந்து விலகு” என்றிருந்தார். (Your are a disgrace not only to the GOP but to all America. Withdraw from the U.S. presidential race as you never win)
.
அதற்கு ரம்ப், Alwaleed “wants to control our U.S. politicians with daddy’s money. Can’t do it when I get elected” என்று தனது Twitter செய்தியில் கூறியிருந்தார்.
.
2015 ஆம் ஆண்டில் Alwaleed தனது சொத்துக்களில் $32 பில்லியனை நன்கொடை செய்வுள்ளதாக கூறியிருந்தார்.
.