துருக்கியின் (Turkey) தலைநகர் இஸ்தான்புல்லில் (Istanbul) உள்ள சவுதியின் தூதரகத்துள் வைத்து சவுதி பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. Jamal Khasgoggi என்ற அமெரிக்காவின் The Washington Post பதிக்கையாளரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம்.
.
சவுதியை சார்ந்த இந்த பத்திரிகையாளர் தற்போதைய சவுதி அரசுக்கு பாதகமான கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அதனால் சவுதி அரசின் மிரட்டலுக்கு உள்ளான இவர், 2017 ஆம் ஆண்டு முதல் சவுதி செல்லாது அமெரிக்காவிலேயே தங்கி இருந்துள்ளார்.
.
மேற்படி பதிக்கையாளர் முதலில் கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி தனது சவுதி ஆவணம் ஒன்றை பெறுவதற்காக துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்துக்கு சென்றுள்ளார். பின் கடந்த செவ்வாய்க்கிழமையும் அவர் பிற்பகல் சுமார் 1:30 அளவில் அந்த தூதரகம் சென்றுள்ளார். அதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளார்.
.
சவுதி தூதரகம் தனது கூற்றில் Jamal Khasgoggi தூதரகத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறியுள்ளது. அதை துருக்கி போலீசார் மறுக்கின்றனர்.
.
துருக்கி போலீசார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவுதியில் இருந்து வந்த படுகொலைக்கு காரணமான 15 பேரும் தற்போது துருக்கியை விட்டு வெளியேறி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
.