சவுதியின் விமான தாக்குதல்களுக்கு யேமெனில் 100 பேர் பலி

Yemen

சவுதி தலைமையில் யேமனில் உள்ள Dhamar என்ற இடத்தில் யுத்த விமானங்கள் இன்று ஞாயிறு செய்துகொண்ட தாக்குதல்களுக்கு குறைந்தது 100 பேர் பலியாகி உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. அத்துடன் குறைந்தது 40 பேர் காயமடைந்தும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
.
யேமெனில் இயங்கும் ஈரானின் ஆதரவு கொண்ட குழுக்ககளின் கட்டுப்பாடில் உள்ள பகுதியிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன. சிதைந்து போயுள்ள யேமெனின் முன்னாள் அரசுக்கு சவுதி ஆதரவு செலுத்துகிறது.
.
தாம் எதிரணி ஏவுகணைகளை வைத்திருக்கும் இடத்தையே தாக்கியதாக சவுதி கூறியுள்ளது.
.
2016 ஆம் ஆண்டு முதல் அங்கு இடம்பெற்றுவரும் யுத்தத்துக்கு இதுவரை சுமார் 70,000 பேர் பலியாகி உள்ளதாக ஐ. நாவினால் கூறப்படுகிறது.
.
அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் ஆதரவு கொண்ட சவுதியின் செயல்பாடுகள் தொடர்பாக மேற்கு பெரிதும் கவலை கொள்வதில்லை.
.