சவுதிக்கு அணுசக்தி அறிவு வழங்குகிறார் ரம்ப்

USA-Saudi

தனது கட்சியான Republican கட்சியையும், எதிர் கட்சியான Democrat கட்சியையும் மீறி, அவர்களுக்கு தெரியாது, அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இராணுவ பயன்பாடு கொண்ட அணுசக்தி அறிவுகளை சவுதிக்கு வழங்க முன்வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
.
கடந்த கிழமை வெளிவந்த செய்திகளின்படி, ரம்பின் சக்திக்கான செயலாளர் (Energy Secretary) Rick Perry 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘Part 810’ என்ற அனுமதி முறையை நடைமுறை செய்துள்ளார். அதன்படி அமெரிக்க நிறுவனங்கள் அணுசக்தி தொடர்பான இரகசிய அறிவுகளை சவுதிக்கு வழங்க முடியும். இந்த உண்மை அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவின் காங்கிரசுக்கும் (Congress)  தெரியாது மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.
.
பொதுவாக அமெரிக்கர்கள் சவுதியின் செயல்பாடுகளை வெறுத்தாலும், ரம்ப் சவுதியுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ளார்.
.
அதேவேளை சவுதி அணுகுண்டு ஆய்வுகளுக்கு பயன்படாத, அணுமின் உற்பத்திக்கு மட்டும் பயன்படும் உலைகளையும் நிறுவ முன்வந்துள்ளது. அவ்வகை உலைகளை நிறுவும் பணிகளை பொறுப்பேற்க அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன.

.