முன்னாளில் பிலிப்பீன் நாட்டை ஆண்ட சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசின் (Ferdinand Marcos) மகன் திங்கள்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் சனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.
பொங்பொங் (Bongbong) என்று அழைக்கப்டும் மகன் Marcos Jr. தனது சர்வாதிகார தந்தையை ஒரு அரசியல் அறிவாளி (political genius), தாயை அதிஉயர் அரசில்வாதி (supreme politician) என்றெல்லாம் புகழ் பாடி இருந்தும் அவருக்கு பெருமளவு மக்கள் வாக்களிக்கலாம் என்று கருதப்படுகிறது.
சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோஸ் காலத்தில் பல்லாயிரம் மக்கள் சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருந்தனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட பலநூறு பேரின் பெயர்கள் Quezon என்ற நகரில் உள்ள Wall of Remembrance என்ற சுவரில் பதியப்பட்டு உள்ளன.
சர்வாதிகாரியின் மனைவி இமெல்டா (Imelda) அரச பணத்தில் பெரும் ஆடம்பர வாழ்வு வாழ்ந்தவர். ஒருதடவை இவரிடம் இருந்து அமெரிக்க சுங்கம் $21 மில்லியன் பெறுமதியான 25-carat pink வைரத்தை பறிமுதல் செய்து இருந்தது.
1986ம் ஆண்டு மார்க்கோஸ் குடும்பம் விரட்டி அடிக்கப்பட அவர்கள் Hawaii சென்று வாழ்ந்தனர். சர்வாதிகாரி 3 ஆண்டுகளின் பின் மரணமாகினார். இக்குடும்பம் சுமார் $10 பில்லியன் அரச சொத்தை களவாடி இருந்ததாக Philippines Presidential Commission on Good Governance கூறி இருந்தது. அதில் சுமார் $3 பில்லியன் மீட்கப்பட்டு இருந்தது.
தற்போதைய சனாதிபதியின் மகள் Sara Duterte பொங்பொங்கின் உதவி சனாதிபதியாக போட்டியிடுகிறார்.
இப்போது பொங்பொங்க்கு வாக்களிக்கும் பிலிப்பீன் மக்கள் பின்னர் Bongbong Go Home என்று போராடக்கூடும்.