சர்வதேச நீதிமன்றுக்கு அமெரிக்கா தடை 

சர்வதேச நீதிமன்றுக்கு அமெரிக்கா தடை 

International Criminal Court (ICC) என்ற சர்வதேச குற்ற நீதிமன்றுக்கு அமெரிக்க காங்கிரசின் அங்கமான House வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. Illegitimate Court Counteraction Act என்ற இந்த சட்டத்துக்கு 243 House உறுப்பினர்கள் ஆதரவாகவும், 140 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து உள்ளனர்.

காசாவில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹுவை கைது செய்ய ICC பிடியாணை வழங்கியதே அமெரிக்காவின் மூர்க்கத்துக்கு காரணம். அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்கு ஐ.நா., ICC போன்றவற்றின் சட்டங்கள் வறிய, சிறிய நாடுகளுக்கு மட்டுமே, அவர்களுக்கு அல்ல.

அணைத்து Republican கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி 45 Democratic கட்சி உறுப்பினர்களும் கூடவே ICC தடைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

2020ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் செய்த யுத்த குற்றங்களை ICC விசாரணை செய்ய முனைந்தபோது அக்கால ரம்ப் அரசு ICC அதிகாரிகளை தடை செய்திருந்தது. அப்போது Fatou Bensouda உட்பட சில ICC அதிகாரிகளின் வங்கி கணக்குகளை அமெரிக்கா முடக்கி இருந்தது.