கரோனாவை காரணம் காட்டி அமெரிக்க சனாதிபதி தேர்தலை பின்போட முனைகிறார் அமெரிக்க தற்போதைய சனாதிபதியும், சனாதிபதி வேட்பாளருமான ரம்ப். இன்றைய தனது Tweet செய்தியில் மக்கள் “properly, securely, safely” வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்வரை தேர்தலை பின்போட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வழமையாக அமெரிக்க சனாதிபதி தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாத முதல் செய்வாய் கிழமை இடம்பெறும். இந்த விதியை சனாதிபதி இலகுவில் மாற்ற முடியாது. அமெரிக்க காங்கிரஸ் (House + Senate) அந்த முடிவை நடைமுறை செய்தல் வேண்டும். ஆனால் House தற்போது மற்ற கட்சியான Democrtic கட்சியின் கையில் உள்ளது. தமக்கு வெற்றி கிடைக்கும் என்று கருதும் Democrtic கட்சியினர் தேர்தலை பின்போட மறுத்துள்ளனர்.
குறைந்தது 6 மாநிலங்கள் முற்றாக தபால் மூலமான தேர்தலை நடாத்த முனைகின்றன. California, Utah, Hawaii, Colorado, Oregon, வாஷிங்டன் ஆகிய மாநிலங்கள் அவை. தபால் மூல வாக்களிப்பு ஊழல்கள், குளறுபடிகளை உருவாகும் என்கிறார் ரம்ப். தபால் மூலம் வாக்களிப்பவர் மீண்டும் நேரடியாக வாக்களிக்க முனையலாம் என்பதே அவரின் வாதம்.
அத்துடன் தேர்தல் தினத்துக்கு பின் அஞ்சல் செய்யப்படும் வாக்களிப்புகளை எவ்வாறு அறிந்து விலகுவது என்பதிலும் திடமான முடிவு இல்லை. காகித உறைக்குள் இருக்கும் வாக்கு பத்திரத்தில் தபால் அலுவலக முத்திரை (stamp) இருக்காது.