சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பைடென்

சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பைடென்

2024ம் ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று செவ்வாய் அறிவித்துள்ளார். தற்போது 80 வயதான பைடேன் அமெரிக்காவின் வயதில் முதிர்ந்த சனாதிபதியாவார்.

பைடெனின் வயது அமெரிக்காவின் சனாதிபதி பதவிக்கு தகுமா என்று அவரின் கட்சியினர் பலரும் வியக்கின்றனர். அத்துடன் Republican கட்சி வயதில் இளையவர் ஒருவரை போட்டியிட வைத்தால், பைடென் வாக்குகளை இழக்க நேரிடுமா என்றும் கேட்கப்படுகிறது.

2024ம் ஆண்டில் பைடென் சனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்படடால், அவர் தனது இரண்டாவது ஆட்சியின் இறுதியில் 86 வயதானவராக இருப்பார்.

தற்போது மிக குறைந்த அமெரிக்கரே பைடென் தனது பணியை தரமாக செய்கிறார் என்று கூறுகின்றனர் (low approval rating).

ரம்ப் மீது வழக்குகள் இருந்தாலும் அவர் மீண்டும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியாது. அதனால் மீண்டும் ஒரு முறை ரம்பும், பைடெனும் மோதிக்கொள்ளலாம்.