கடந்த நவம்பர் மாதத்தில் ஆபிரிக்காவின் Botswana என்ற நாட்டில் 1,109 கரட் வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டு இருந்தது. இதை கனடாவின் அகழ்வு நிறுவனமான Lucara Diamond Corporation எடுத்திருந்தது. இந்த வைரம் சுமார் 3 பில்லியன் வருடம் பழமையானதாக இருக்கலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. இது இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட வைரங்களில் இரண்டாவது பெரியது என நம்பப்படுகிறது.
.
.
வரும் ஜூன் 29 அன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படப்போகும் இந்த வைரம் சுமார் $70 மில்லியன் பெறுமதியானதாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. Sotheby என்ற ஏல நிறுவனத்தால் லண்டனில் இது ஏலம் விடப்படும்.
.
.
முதலாவது பெரிய வைரம் தென் ஆபிரிக்காவில் 1905 ஆண்டு அகழ்ந்து எடுக்கப்பட்டு இருந்தது. அது 3,106 கரட் கொண்ட வைரமாகும். ஒன்பது சிறு வைரங்களாக மாற்றப்பட்ட அது தற்போது இங்கிலாந்து இராணியின் சொத்தாக உள்ளது.
.
.
கடந்த வருடம் Joseph Lau என்ற Hong Kong செல்வந்தர் பட்டைதீட்டப்பட்ட 12.03 கரட் வைரம் ஒன்றை $48.5 மில்லியனுக்கு பெற்று அதை தனது 7 வயது மகளுக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.
.