திங்கள் கிழமை, ஜூலை 16 ஆம் திகதி, அதிகாலை 2:51 மணிக்கு சந்திரனை நோக்கி விண்கலம் ஒன்று இந்தியாவால் ஏவப்பட்டு இருந்தமை இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கலம் இன்னோர் நாளில் ஏவப்படும் என்று கூறப்படாலும், அதற்கான நாளை இந்தியா இதுவரை அறிவிக்கவில்லை.
.
Chandrayaan-2 என்ற இந்த கலம் ஏவப்பட 56 நிமிடங்கள், 24 செக்கன்கள் இருக்கையிலேயே இயந்திர கோளாறு அறியப்பட்டு, ஏவல் இடைநிறுத்தப்பட்டது.
.
இந்த விண்கலத்தின் மொத்த நீளம் 44 மீட்டர்கள் ஆகும். இதன் மொத்த எடை 58,000 kg. இந்த பயணத்தின் மொத்த செலவு சுமார் $141 மில்லியன் என்று கூறப்படுகிறது.
.