சந்திரனில் எடுத்த கல், மண் மாதிரிகள் இன்று சீனா வந்தடைந்து உள்ளன. சந்திரன் சென்ற சீனாவின் Chang’e-5 கலம் மொத்தம் 23 தினங்களின் பின் திட்டமிட்டபடி வியாழக்கிழமை காலை Inner Mongolia பகுதியில் வீழ்ந்து உள்ளது. அமெரிக்கா, சோவியத் ஆகிய நாடுகளின் பின் சீனா இந்த சாதனையை வெற்றிகரமாக செய்துள்ளது.
Chang’e-5 கலம் சுமார் 2 kg சந்திர மாதிரிகளை எடுத்துவந்துள்ளது. சில மாதிரிகள் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து பெறப்பட்டன. சில 2 மீட்டர் ஆழத்தில் இருந்து துளைத்து பெறப்பட்டன. சீனா தனது தேசிய கொடியையும் சந்திரனில் நாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை சந்திர மாதிரியை எடுத்து வந்திருந்தாலும், உண்மை நோக்கம் சீனரை சந்திரனுக்கு அனுப்ப தேவையான பயிற்சியை செய்வதே. சந்திரன்வரை கலத்தை ஏவுவது, பின் ஒருபகுதி (lander) பத்திரமாக சந்திரனில் இறங்குவது, பின் சந்திரனில் இருந்து மேலேறி சந்திரனை சுற்றிக்கொண்டிருக்கும் தாய் கலத்துடன் இணைவது, பின் பூமிக்கு வருவது போன்ற செயற்பாடுகளை பரிசோதனை செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
புதனுக்கும் சீனா ஆளில்லா கலம் ஒன்றை கடந்த ஜூலை மாதம் அனுப்பி உள்ளது.
அமெரிக்காவின் தலைமையில் இயங்கிவரும் International Space Station னுக்கு பதிலாக சீனாவும் தனது Space Station ஒன்றையும் அமைக்கவுள்ளது. ரஷ்யா International Space Stationனில் இணைந்து செயற்படுவதை அமெரிக்கா அனுமதித்து இருந்தாலும், சீனாவை மட்டும் அமெரிக்கா தடுத்து இருந்தது.
படம்: Xinhua