சீனாவின் Chang’e 6 என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில் பத்திரமாக சீன நேரப்படி ஞாயிறு காலை தரையிறங்கி உள்ளது. இந்த கலம் அங்கிருந்து 4 kg சந்திர நிலத்தின் மாதிரியை பூமிக்கு எடுத்துவரும்.
இதுவே இதுவரை மனிதன் செலுத்திய சந்திர கலங்களில் மிகவும் நுணுக்கமானது.
சந்திரனின் மறுபக்கத்தில் சீனா தரையிறங்குவது இது இரண்டாவது தடவை. 2019ம் ஆண்டு சீனாவின் Chang’e 4 கலம் பத்திரமாக தரை இறங்கி இருந்தது.
2030ம் ஆண்டு சீனா சந்திரனில் சீன விண்வெளி வீரரை தரையிறக்க முனைந்து வருகிறது. பின் அங்கு ஒரு நிரந்தர ஆய்வு நிலையத்தையும் கட்ட சீனா திட்டம் கொண்டுள்ளது.
சந்திரனின் மறுபக்கத்துடன் பூமியில் இருந்து நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. அதனால் சீன சந்திரனின் மறுபக்கத்தில் ஒரு சந்திர செய்மதியை ஏவி அதன் மூலம் தொடர்புகளை செய்கிறது.
சந்திரன் தன்னை தானே சுற்றவும், பூமியை சுற்றவும் ஒரே காலத்தை எடுப்பதால் சந்திரனின் மறுபக்கத்தை பூமியில் இருந்து பார்க்க முடியாது.