கோளாறு காரணமாக நாளை திரும்பும் Boeing விண்கலம்

Boeing_Starliner

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing தனது CST-100 Starliner என்ற விண்கலத்தை NASA வுடன் இணைந்து ஏவி இருந்தது. அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த கலம் 409 km உயரத்தில் பூமியை வலம் வரும் International Space Station (ISS) உடன் இணைய இருந்தது.
.
ஆனால் மேற்படி கலம் உரிய பாதையை (orbit) அடையாத காரணத்தால் ISS உடன் இணையாது மீண்டும் பூமிக்கு ஒரு கிழமை முன்னராகவே திரும்ப உள்ளது. அமெரிக்காவின் New Mexico மாநில நேரப்படி ஞாயிரு காலை இந்த கலம் தரையிறங்கும்.
.
இந்த கலம் விண்வெளி வீரர்களை காவக்கூடியது என்றாலும், இம்முறை பரிசோதனை ஏவல் ஆகையால் விண்வெளி வீரர்களை கொண்டிருக்கவில்லை.
.
Boeing நிறுவனத்துடன் போட்டியிடும் SpeaceX என்ற நிறுவனத்தின் கலம் கடந்த மார்ச் மாதம் வெற்றிகரமாக ISS உடன் இணைந்துள்ளது.
.
அமெரிக்க விண்வெளி வீரர்களை ISS க்கு எடுத்துச்செல்லும் நடவடிக்கையை NASA 2011 ஆம் ஆண்டில், பாரிய விபத்துகளின் பின், நிறுத்தி இருந்தது. தற்போது ரஷ்யாவே அமெரிக்க வீரர்களை ISS க்கு எடுத்து செல்கிறது.
.
2014 ஆம் ஆண்டில் Boeing மற்றும் SpaceX ஆகிய இரண்டு நிறுவனங்களையும் புதிய கலம் அமைக்கும் பணிக்கு அமர்த்தியது NASA. அத்துடன் Boeing நிறுவனத்துக்கு $4.2 பில்லியனும், SpaceX க்கு $2.5 பில்லியனும் வழங்கப்பட்டு இருந்தது.
.