கொழும்பில் ஆழ்கடலை நிரப்பி சீனாவால் உருவாக்கப்படும் Port City வர்த்தக வலயம் இலங்கை ரூபாயை தவிர்த்து, அமெரிக்க டொலர் மயமாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதவாது இந்த வர்த்தக வலயத்தில் இடம்பெறும் கொடுக்கல், வாங்கல் எல்லாம் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
இலங்கை நாணயம் தொடர்ந்தும் பாரிய வீழ்ச்சியை அடைந்து வருவதால், Port City வலயம் வர்த்தக டாலர் மயமாக்கப்படல் அங்கு முதலீடு செய்பவர்களை இலங்கை நாணய வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கும்.
அத்துடன் இங்கு வரும் முதிலீடுகள் அனைத்தும் நேரடியாக வெளிநாடுகளில் இருந்தே வரவேண்டும். இலங்கையில் உள்ள வங்கிகள் மூலம் இந்த வர்த்தக வலயத்தில் முதலிட முடியாது போகலாம். இலங்கை வங்கிகளில் டாலர் நாணய கணக்குகள் இருந்தாலும் அவை Port City முதலீட்டுக்கு பயன்பட தடை இருக்கும்.
இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் டாலர் மூலமே ஊதியம் வழங்கப்படாலம். இந்த ஊதியங்களுக்கு வருமான வரிவிலக்கும் வழங்கப்படலாம்.
Port City வர்த்தக வலயம் சுமார் $15 பில்லியன் முதலீடுகளை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.