கொழும்பு Port City சேவைக்கு 10 வங்கிகள் விருப்பம்

கொழும்பு Port City சேவைக்கு 10 வங்கிகள் விருப்பம்

கொழும்பு Port City எல்லைக்குள் தமது வங்கி சேவைகளை வழங்க இலங்கையின் 9 வங்கிகளும், Bank of China என்ற சீன வங்கியும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இலங்கையின் 9 வங்கிகளும் வருமாறு:
1) Commercial Bank of Ceylon 
2) Hatton National Bank (HNB)
3) Sampath Bank 
4) National Development Bank (NDB)
5) National Trust Bank (NTB)
6) Union Bank 
7) DFCC 
8) Bank of Ceylon 
9) People’s Bank 

Port City வலயம் ஒரு டாலர் நாணய வலயம் ஆதலால் இங்கே இயங்கும் வங்கிகள் டாலர் கணக்குகளை மட்டுமே கொண்டிருக்கும். அத்துடன் இந்த வங்கிகள் இந்த வலயத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டவர்க்கும் மட்டுமே சேவை செய்யும்.

இந்த வங்கிகள் இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கினாலும் இலங்கை ரூபாயின் தாக்கத்துக்கு உட்படாது.