கொழும்பு துறைமுகத்துக்கு மிக பெரியதோர் வர்த்தக கப்பலான MSC Maya வரவுள்ளது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட Maya 20 அடி நீளமான 19,224 கொள்கலன்களை காவக்கூடியது. 2015 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் கட்டப்பட்ட இந்த கப்பல் சுமார் 395 மீட்டர் நீளமானது. இதன் இயந்திரங்கள் 83,780 hp (குதிரைவலு) வலுவை வழங்கக்கூடியன. இந்த மாதம் 16 ஆம் திகதி இது கொழும்பை வந்தடையும்.
.
தற்போது நான்கு கொள்கலன் கப்பல்கள் உலகின் மிகப்பெரிய கப்பல்கள் என்ற இடத்தில் உள்ளன. அவை நான்கும் 19,224 கொள்கலன்களை காவக்கூடியன. மற்றைய மூன்றும் MSC Oscar, MSC Oliver, MSC Zoe ஆகும்.
.
.
தற்போது நான்கு கொள்கலன் கப்பல்கள் உலகின் மிகப்பெரிய கப்பல்கள் என்ற இடத்தில் உள்ளன. அவை நான்கும் 19,224 கொள்கலன்களை காவக்கூடியன. மற்றைய மூன்றும் MSC Oscar, MSC Oliver, MSC Zoe ஆகும்.
.
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு சேவை செய்வதன் மூலம் கொழும்பு துறைமுகம் பெரும் வருமானத்தையும், அதிக வேலைவாய்ப்புக்களையும் அடையாலாம்.
.
.
தற்போது Maya Bremerhaven (ஜேர்மன்), Rotterdam (நெதர்லாந்து), சூயஸ் கால்வாய், கொழும்பு, சிங்கப்பூர், Hong Kong, TianJin (சீனா), Qingdao (சீனா), Busan (தென் கொரியா) வழியில் செல்கிறது.
.
இதற்கு முன் 16,652 கொள்கலன்களை காவக்கூடிய MSC New York, 16,020 கொள்கலன்களை காவக்கூடிய Marco Polo ஆகிய கப்பல்கள் கொழும்பு துறை வந்திருந்தன.
.
கொழும்பு சர்வதேச கொள்கலன் துறைமுகம் (Colombo International Container Terminals) தற்போது சீனாவின் China Merchants Port Holding Company Limited நிறுவனத்தின் அங்கமாகும்.
.