தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் (Colombia) இடம்பெற்ற ஆற்று பெருக்கெடுப்புக்கு குறைந்தது 193 பேர் பலியாகி உள்ளனர். கொலம்பியா-எக்குவடோர் எல்லைப்பகுதியில், மலைகளுக்கு இடையே அமைந்துள்ள Mocoa என்ற 40,000 பேர் வாழும் நகரிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்று உள்ளது.
.
.
கரைந்துபோன மண்ணுடன் பெருக்கெடுத்து ஓடும் ஆறு வீடுகளுள் உறங்கிக்கொண்டு இருந்தோர், கார்களுள் இருந்தோர் என பலரையும் அள்ளி சென்றுள்ளது.
.
.
மேலும் 220 பேரை காணவில்லை என்றும், சுமார் 400 பேர் காயமடைந்து உள்ளனர் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
.
இந்த அனர்த்தம் இன்று சனிக்கிழமை இடம்பெற்று உள்ளது.
.