கொலம்பியாவில் விமானம் வீழ்ந்து 71 பேர் பலி

Flight2933

கொலம்பியாவில் பிரேசில் நாட்டு உதைபந்தாட்ட வீரர்களை ஏற்றி சென்ற வாடகை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் ஆறு பேர் உயிர் தப்பியும் உள்ளார். மரணமானோரில் பெரும்பாலானோர் உதைபதாட்ட வீரரும், பத்திரிகையாளரும் ஆவர். உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:00 மணியளவில் விமானி அபாயக்குரல் கொடுத்துள்ளார். அவர் விமானத்தில் இலத்திரனியல் குழப்பம் உருவாகியுள்ளதாக கூறி உள்ளார். பின்னர் அந்த விமானம் வீழ்ந்துள்ளது.
.
இந்த விமானம் (flight 2933) பிரேசில் நாட்டு உதைபந்தாட்ட வீரர்களை ஏறிக்கொண்டு Copa Sudamericana போட்டிக்காக பொலிவியா நகரான Santa Cruzசிலிருந்து கொலம்பியா நகரான Medellinஐ நோக்கி செல்கையிலேயே இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. இந்த விமானத்தில் 81 பேர் பயணித்து உள்ளனர்.
.

வீழ்ந்த விமானம் British Aerospace 146 வகை விமானமாகும். 1999 ஆம் ஆண்டில் சேவைக்கு வந்திருந்த இந்த விமானம் 2007 ஆம் ஆண்டுவரை அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் பயன்படுத்ததப்பட்டு, 2013 ஆம் ஆண்டுமுதல் பொலிவியா (Bolivia) நிறுவனம் ஒன்றினால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
.