கொரோனா தொற்று 1.68 மில்லியன், மரணம் 102,000

NewYork_Corona

உலக அளவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் தொகை 102,000 ஆக அதிகரித்து உள்ளது. அதேவேளை கொரோனா தொற்றியோர் தொகை 1.68 மில்லியன் ஆக உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளுமே தற்போது மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொற்றுக்கு உள்ளாகி பின் குணமடைந்தோர் தொகை 374,509 ஆகவும் உள்ளது.
.
அமெரிக்காவில் மட்டும் தற்போது 491,358 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டில் 157,053 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். இத்தாலியில் 147,577 பேரும், பிரான்சில் 125,930 பேரும் , ஜெர்மனியில் 120,157 பேரும் தொற்றி உள்ளனர்.
.
இத்தாலியில் 18,849 பேரும், அமெரிக்காவில் 18,316 பேரும், ஸ்பெயினில் 15,970 பிரான்சில் 13,215 பேரும், பிரித்தானியாவில் 8,974 பேரும் , ஈரானில் 4,232 பேரும், சீனாவில் 3,340 பேரும், ஜெர்மனியில் 2,688 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
.
இந்தியாவில் கொரோனா தொற்றியோர் தொகை 7,598 ஆகவும், மரணித்தோர் தொகை 246 ஆகவும் உள்ளன. இலங்கையில் கொரோனா தொற்றியோர் தொகை 190 ஆகவும், மரணித்தோர் தொகை 7 ஆகவும் உள்ளன.
.
அமெரிக்காவிலும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக நியூ யார்க் நகர் பகுதி உள்ளது. இங்கு கொரோனா தொற்றியோர் தொகை சுமார் 160,000 ஆக உள்ளது. இத்தொகை இரண்டாம் இடத்தில உள்ள ஸ்பெயின் நாட்டின் தொகையிலும் அதிகம். நியூ யார்க் பகுதியில் கொரோனாவுக்கு பலியானோர் தொகை 7,000 ஆக உள்ளது. இங்கு கொரோனாவுக்கு பலியானோர் ஒன்றாக பெரும் குழிகளில் புதைக்கப்படுகின்றனர்.
.