கொரோனாவுக்கு அமெரிக்காவில் 9 பேர் பலி

Coronavirus

கொரோனாவுக்கு அமெரிக்காவில் இன்று செவ்வாய் வரை 9 பேர் பலியாகி உள்ளனர். Seattle நகரை கொண்ட வாஷிங்டன் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டும் 27 பேர் கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மொத்தமாக 108 பேர் அமெரிக்காவில் நோய்வாய்ப்பட்டு உள்ளனர்.
.
இதுவரை 1,981 பேர் சீனாவிலும், 77 பேர் ஈரானிலும், 52 பேர் இத்தாலியிலும், 32 பேர் தென்கொரியாவிலும், 6 பேர் ஜப்பானிலும், 4 பேர் பிரான்சிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
.
உலக அளவில் 92,787 பேர் நோய்வாய்ப்பட்டும், 3,174 பேர் பலியாகியும் உள்ளனர். நோய்வாய்ப்பட்டு இருந்த 50,691 பேர் குணமாகியும் உள்ளனர்.
.
ஈரானில் 25 பாராளுமன்ற உறுப்பினர்களும் கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகினர்.
.
சுமார் 330 மில்லியன் மக்களை கொண்ட அமெரிக்காவில் சாதாரண வைரஸுக்கு மட்டும் (flu) வருடம் ஒன்றில் சுமார் 10,000 பேர் பலியாவது உண்டு. ஆனாலும் கொரோனா வைரஸின் மிரட்டல் உக்கிரமாக உள்ளது.
.