ஆபிரிக்க நாடான கொங்கோவில் (Democratic Republic of the Congo) பெரும் அழிவுகளை தரக்கூடிய வாவி வெடிப்பு (limnic eruption) ஒன்று நிகழக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. கொங்கோ நாட்டில், Rwanda எல்லையோரம் உள்ள Lake Kivu என்ற வாவியே இந்த வெடிப்புக்கு இலக்கு ஆகாலம் என்று கூறப்படுகிறது.
இந்த வாவிக்கு அருகே உள்ள Nyiragongo என்ற எரிமலை தற்போது தீ குழம்பை (lava) வெளியே தள்ளுகிறது. அந்த குழம்பு ஏற்கனவே அருகில் உள்ள Goma என்ற நகரில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமை ஏற்பட்ட குமுறலுக்கு குறைந்தது 32 பேர் பலியாகி உள்ளனர்.
எரிமலை குமுறும் அதேவேளை நிலத்துக்கு கீழும் தீ குழம்பு (magma) அருகில் உள்ள Kivu வாவியை நோக்கி நகர்கிறது. இது வாவிக்கு கீழிருந்து வெடித்து வெளியேறினால் அது அங்கு மிகையாக உள்ள CO2 வாயுவுடன் சேர்ந்து மக்களையும், உயிரினங்களையும் அழிக்கக்கூடிய வாயுவை வெளியிடும் என்று கருதப்படுகிறது.
1984ம் ஆண்டு கமெரூன் (Cameroon) நாட்டில் உள்ள Monoun என்ற CO2 கொண்ட சிறியதொரு வாவி வெடித்து இருந்தது. அதற்கு 37 பேர் பலியாகி இருந்தனர். 1986ம் ஆண்டு அருகில் உள்ள Nyos என்ற CO2 கொண்ட வாவி வெடித்து, சுமார் 80 மில்லியன் சதுர மீட்டர் CO2 வாயுவை வெளியிட்டது. அதற்கு 1,700 பேர் பலியாகியும், 3,000 மிருகங்கள் மரணித்தும் இருந்தன.
ஆனால் தற்போது ஆபத்தில் உள்ள 2,700 சதுர km பரப்பளவு கொண்ட Kivu வாவியானது 1.58 சதுர km பரப்பளவு கொண்ட Nyos வாவியுடன் ஒப்பிடுகையில் 1,700 மடங்கு பெரியது. அத்துடன் இதற்கு அண்மையில் Goma என்ற பெரு நகரம் உட்பட பெருமளவு மக்கள் வாழ்கின்றனர்.
CO2 வளியிலும் அடர்த்தி குறைந்தது என்றபடியால், அது நிலமடத்திலேயே பரவும். அவ்வாறு நிலமடத்தில் பரவுதல் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்தானதாக இருக்கும்.
பாரிய வாவி வெடிப்பு சுனாமியையும் உருவாக்கலாம்.
ஏற்கனவே சுமார் 400,000 மக்கள் Goma நகரை நீங்கி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து உள்ளனர்.