பர்மா என்று முற்காலங்களில் அழைக்கப்பட்ட மயன்மாரின் முக்கிய அரசில் பிரமுகரான அங் சன் சு கியின் (Aung San Suu Kyi) அரசியல் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியில் உள்ளது. மேற்கு நாடுகளின் பலத்த ஆதரவுடன் பர்மாவின் அடுத்த தலைவராக இவர் தெரிவு செய்யப்படலாம் என்று அண்மைவரை கருதப்பட்டு வந்தது. அனால் இந்தக்கிழமை உறுதிப்படுத்தப்பட சட்டம் ஒன்று Suu Kyi அந்நாட்டின் தலைவர் ஆவதை தடுக்கின்றது.
பர்மாவின் நீண்டகால சட்டப்படி ஒருவரின் கணவர்/மனைவி அல்லது பிள்ளைகள் வேறு நாடு ஒன்றின் பிரசையாயின் அந்த நபர் ஜனாதிபதியாகவோ அல்லது உப-ஜனாதிபதியாகவோ பதவி பெற முடியாது. அதேவேளை Suu Kyiயின் காலம்சென்ற கணவர் ஒரு பிரித்தானிய பிரசை. அத்துடன் அவரின் இரு பிள்ளைகளும் பிரித்தானிய பிரசைகள். அதனால் இவர் ஜனாதிபதியாக முடியாது.
இந்த சட்டத்தை மாற்றி அமைப்பதை மறுபரிசீலனை செய்ய 31 உறுப்பினர் கொண்ட குழு ஒன்று நியமிக்கபட்டிருன்தது. ஆனால் அந்த குழு 26/31 வாக்கு வீதத்தால் அவ்வகை தடை சட்டம் தொடர்வதை தெரிவு செய்துள்ளது.
இவ்வகை சட்டங்கள் மேற்கு நாடுகளிலும் இருப்பதால், மேற்கு நாடுகள் பர்மாவின் இந்த சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது.