Google நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுமார் $5 பில்லியன் (4.3 பில்லியன் யூரோ) தண்டம் விதித்துள்ளது. கடந்த 3 வருடங்களாக செய்துவந்த விசாரணைகளின் பின்னரே இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Google தனது பலத்தால் மற்றைய நிறுவனங்களை அழிக்கும் செயல்பாடுகளை வரும் 90 நாட்களுள் நிறுத்தவேண்டும் என்றும், மறுப்பின் மேலும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
.
.
கூகிளின் அன்ட்ரொய்ட் (Android) operating system (OS) பெருமளவு smart phone சந்தையை கொண்டுள்ளது. Samsung, LG, Huawei, ZTE, HTC போன்ற பல smart phoneகள் Android OSஐ பயன்படுத்துகின்றன. உலகின் சுமார் 80% smart phoneகள் கூகிளின் Android OS ஐயே பயன்படுத்துகின்றன. Google இந்த பலத்தை பயன்படுத்தி தனது Chrome browserஐ கட்டாயப்படுத்தி திணிக்கிறது. மேற்கூறிய அனைத்து smart phone நிறுவனங்களும் Chrome browserஐ இணைத்தே தமது smart phoneகளை விற்பனை செய்யவேண்டும் என்று Google பணித்துள்ளது. அது வர்த்தக விதிமுறைகளுக்கு முரணானது.
.
.
2017 ஆம் ஆண்டில் கூகிளின் வருட வருமானம் சுமார் $111 பில்லியன்.
.
Microsoft நிறுவனம் Windows மூலம் கணணிகளுக்கான OS ஆளுமையை கொண்டிருந்தபோதும் இவ்வாறு தனது கணனி browserரான Internet Explorerஐ மட்டுமே Microsoft OS கொண்ட புதிய கணனிகள் கொண்டிருக்கவேண்டும் என்று விதிமுறை வைத்திருந்தது. பின்னர் அந்த குற்றத்துக்காக அமெரிக்கா உட்பட பலநாடுகளில் தண்டம் செலுத்தி இருந்தது.
.
.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நிலவிவரும் பொருளாதார முரண்பாடுகளை இந்த தண்டமும் உக்கிரம் அடைய செய்யலாம். கூகிள் ஒரு அமெரிக்க நிறுவனமாகும்.
.