கடந்த சில நாட்களாக மேற்கு இந்திய மாநிலமான குயாராத்தில் (Gujarat) இளம் பட்டேல்கள் (Patel, Patidar caste) தாலித்துக்களுக்கான பங்கீட்டுக்கு எதிராக போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். குயாராத்தில் வாழும் 22 வயதுடைய Hardik Patel என்பவர் தனது இளைய சகோதரி, தாலித்துகளுக்கான பங்கீடு காரணமாக, கல்லூரி அனுமதி இழந்ததை எதிர்த்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவ்வாறு கல்லூரி அனுமதி மற்றும் அரச வேலைவாய்ப்புகளை இழந்த பல்லாயிரம் பட்டேல்கள் இவருடன் இணைந்துள்ளனர்.
.
.
கடந்த செய்வாய் அன்று (25-08-2015) Ahmedabad நகரில் Hardik தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் 500,000 இளம் பட்டேல்கள் கூடியுள்ளனர். இதனால் அங்கு ஆட்சியில் உள்ள பட்டேல்கள் மிரண்டுள்ளனர். குயாரத் மீது தாம் கொண்டுள்ள பிடியை இழந்து விடுவோம் என்பதே இவர்கள் பயம். கூட்டம் ஆரம்பித்து 1.5 மணித்தியாலத்துள் நூற்றுக்கணக்கான பொலிசார் அங்கு குவிந்தனர். கூட்டத்தை கலைத்து Hardik ஐ கைது செய்வதே நோக்கம். பொலிசார் தடியடியில் ஆரம்பித்தனர்.
.
.
ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த குயாரத் பாதுகாப்பு அமைச்சர் Rajanikanth Patel தானோ அல்லது முதலமைச்சரோ (Anandiben Patel) போராடும் Hardik Patel கைதுக்கு அழைப்பு விடுவிக்கவில்லை என்றுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மூன்று இரவுகள் பொலிசார் குடியிருப்புகளுள் அத்துமீறி நுழைந்து கார் மற்றும் வீட்டு கண்ணாடிகளை உடைத்துள்ளனர். பல பொதுமக்கள் பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த ஒளிப்படங்கள் Internet எங்கும் உள்ளன. இதுவரை இங்கு 8 உயிர்கள் பலியாகி உள்ளன.
.
குயாராத் மாநிலத்தில் சுமார் 63 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களில் 10 மில்லியன் வரையானோர் பட்டேல்கள். அத்துடன் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் பட்டேல்கள் பலம் அதிகம். இப்பலம் மோடி பிரதமாராக பெரும் உதவி செய்திருந்தது. அனால் பல்லாயிரமான இவ்வகை பட்டேல்கள் இப்போது மோடி மீதும் வெறுப்பு அடைய தொடங்கி உள்ளனர். இந்நிலை தொடரின் அது அடுத்த மோடியின் தேர்தலில் பாதகமாக அமையலாம்.
.
.
தேர்தல்களில் வாக்குக்களை பெறுவதற்காக தாலித்துகளுக்கு அளவுக்கு அதிகமாக கல்லூரிகளிலும், அரச பணிகளிலும் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தாலித் அல்லாதோர் கூறுகின்றனர். இந்தியா எங்கும் சில தாலித் அல்லாதோர் தம்மை தாலித்களாக பதிவு செய்து பயன் அடைவது உண்டு. ஆனால் அது குற்றமாகும்.
.