.
1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் நோக்கி சென்ற குமுதினி என்ற படகில் இருந்த குறைந்தது 36 தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதை அறிந்தவர் அழுதனர். அவ்வழி படகுக்கு தற்போது இன்னோர் அந்தர்தமும் இயற்கையின் அல்லது மனித தவறு காரணமாக அங்கு மீண்டும் நிகழலாம். ஆனால் அதன் பொருட்டு உரியவர்கள் கவலை கொள்வதாகவும் தெரியவில்லை. ஒருவேளை அனர்த்தம் நிகழ்த்தபின் மட்டும் இவர்கள் மீண்டும் அழுவார்களோ?
.
கடந்த வருடம், 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆபிரிக்காவின் தன்சானியா நாட்டுக்கு (Tanzania) உட்பட்ட Lake Victoria வின் தென் பகுதியில் உள்ள Ukara என்ற தீவை நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 228 பேர் பலியாகி இருந்தனர். மற்றைய மூன்றாம் உலக நாடுகளைப்போல் இந்த படகிலும் பயணிகளுக்கான மிதக்கும் கவசங்கள் (life jacket) இருந்திருக்கவில்லை. நீந்த தெரிந்தவர்கள் மட்டும் நீந்தி அல்லது காப்பாற்றப்படும்வரை மிதந்து தப்பினர். ஏனையோர் பலியாகினர். படகு கவிழ்ந்தது செல்லுமிட துறையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலேயே. ஆனாலும் பலரும் பலியாகினர். மொத்தம் 100 பயணிகளை மட்டும் கொள்ளக்கூடிய அந்த படகில் சுமார் 270 பேர் பயணித்து உள்ளனர்.
.
கவிழ்ந்த அந்த படகுள் அகப்பட்டும் பலியாகாது, 42 மணித்தியாலங்களின் பின், உயிருடன் மீட்கப்பட்டிருந்தார் ஆக்கப்பலின் இயந்திரத்துக்கு பொறுப்பான Augustine Charahani என்பவர். கவிழ்ந்த படகின் இயந்திர அறையில் அகப்படுக்கொண்ட சிறிதளவு வளி அவரின் இரண்டரை நாள் சுவாசிப்புக்கு உதவி இருந்தது. ஆனாலும் பல தடவைகள் நித்திரையில் ஆழ்ந்த இவரை நீருள் தாளாது மிதக்க வைத்துள்ளது இவர் அணிந்திருந்த life jacket. இயந்திர அறைக்குள் மட்டும் இருந்த life jacket ஐ இவர் படகு கவிழ்ந்த உடனேயே அணிந்திருந்தார். நன்கு நீந்த, சுழியோட தெரிந்த இந்த கப்பலோட்டியையும் இரண்டரை நாட்களாக மிதக்க வைத்து காப்பாற்றியது life jacket.
.
மிகையாக பயணிகளை ஏற்றுதல், பயணிகளுக்கு life jacket வழங்காமை போன்ற நடைமுறைகள் மூன்றாம் உலக நாடுகளில் சாதாரணம். இங்கு கவலைக்கு உரிய விடயம் என்னவென்றால் குறிகாட்டுவானில் சகல படகு பயணிகளும் life jacket அணிய வேண்டும் என்று அறிவிப்பு பலகைகளுடன் கூடிய சட்டம் இருந்தாலும், நயினாதீவுக்கு செல்லும் படகுகளில் மட்டும் பயணிகள் life jacket அணிவது மேற்பார்வை செய்யப்படுகிறது. இந்த படகு பயணிகளில் பெரும்பாலானோர் நயினாதீவு விகாரைக்கு செல்லும் சிங்கள மக்களே. அதே துறையில் இருந்து நெடுந்தீவு செல்லும் படகில் பயணிகள் life jacket அணிவது மேற்பார்வை செய்யப்படுவது இல்லை. தமிழருக்கு தமிழ் படகோட்டிகள் life jacket வழங்காமைக்கு சிங்கள படையினரை குற்றம் கூற முடியாது. சிங்கள மக்கள் மீது சிங்கள படைக்கு உள்ள அக்கறை தமிழ் மக்கள் மீது தமிழ் அதிகாரிகளுக்கு இல்லது ஏன்?
.
.
குறிகாட்டுவான்-நெடுந்தீவு படகுக்கு ஒருவழி கட்டணமாக Rs 80.00 அறவிடப்படுகிறது. இதை 100.00 ஆக அதிகரித்து, மேலதிகமாக கிடைக்கும் பணத்தில் life jacket வழங்குவது கடினம் அல்ல. குறிகாட்டுவான்-நெடுந்தீவு படகில் பயணிக்கும் பலர் உல்லாச பயணிகள். சிறுவர்கள், வயோதிபர் உட்பட இவர்களில் பலர் நீந்தி கரையை அடைய முடியாதவர்கள். விபத்து ஒன்றின்போது life jacket மட்டுமே இவர்களை உதவி வரும்வரை மிதக்க வைக்கும். குறைந்தது அவ்விடத்தில் ஒரு தனியார் வாடகை life jacket வர்த்தகமாவது ஆரம்பிக்கப்படலாம்.
.
.
மிக சிறிய தூரம் செல்லும் குறிகாட்டுவான்-நயினாதீவு படகில் life jacket வழங்கப்படும்போது, மிக நெடுந்தூரம், பெரும் அலைகள் ஊடாக செல்லும் குறிகாட்டுவான்-நெடுந்தீவு படகுகில் life jacket வழங்காமை தமிழர்களுக்கு தமிழர்களே செய்யும் குற்றம். அனர்த்தத்தின் பின் அழுது பயனிலை.
.
.
.
.