தற்போது பெய்ஜிங் சென்றுள்ள முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு (Henry Kissinger) சீனா பெரும் வரவேற்பு செய்துள்ளது. ஆனால் சீனா சென்ற பைடென் அரச அதிகாரிகளுக்கு அவ்வளவு மரியாதை வழங்கப்படவில்லை என்று வெள்ளைமாளிகை இன்று வியாழன் கவலை தெரிவித்து உள்ளது.
“It’s unfortunate that a private citizen can meet with the defense minister and have a communication and the United States can’t” என்று வெள்ளைமாளிகை பேச்சாளர் John Kirby வியாழன் கவலை தெரிவித்துள்ளார்.
தற்போது 100 வயது கொண்ட கிஸ்ஸிங்கரை வியாழன் சந்தித்த சீன சனாதிபதி கிஸ்ஸிங்கர் ஒரு பழைய நண்பன் என்று அழைத்திருந்தார். ஆனால் தற்போதைய பல பைடென் அரச அதிகாரிகளை சந்திக்க சனாதிபதி சீ மறுத்துள்ளார். 1971ம் ஆண்டு சந்தித்த மண்டபத்திலே இம்முறையின் கிஸ்ஸிங்கரை சீன சனாதிபதி சந்தித்துள்ளார்.
அத்துடன் சீன பாதுகாப்பு அமைச்சரும் கிஸ்ஸிங்கரை சந்தித்துள்ளார்.
சீனாவின் வளர்ச்சிக்கு கிஸ்ஸிங்கர் பிரதான காரணி. அவரின் ஆலோசனை காரணமாகவே முன்னாள் சனாதிபதி நிக்சன் (Richard Nixon) சீனாவின் Deng Xiaoping உடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவை உரப்படுத்தினர்.
அக்காலத்தில் ரஷ்யாவுடன் நெருங்கி இருந்த இந்தியா மீதே அமெரிக்காவுக்கு சந்தேகம் இருந்தது. இந்தியாவே வல்லரசு ஆகவும் என்ற கணிப்பை அமெரிக்கா கொண்டிருந்தது.