ரஷ்ய ஆதரவுடன் யுக்கிரைனின் (Ukraine) கிழக்கு பகுதிகளில் (Donetsk மற்றும் Luhansk) சுதந்திரம் கேட்டு போராடிய பகுதிகளை ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் இன்று திங்கள் சுதந்திர பகுதிகளாக ஏற்று கொண்டுள்ளார். இதனால் அமெரிக்கா, ஐரோப்பா, நேட்டோ விசனம் கொண்டுள்ள.
அத்துடன் சுதந்திர பகுதிக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க ரஷ்ய படைகளையும் அனுப்புமாறு தனது இராணுவத்துக்கு கட்டளையும் இட்டுள்ளார் பூட்டின்.
இப்பகுதிகள் பெரும்பாலும் ரஷ்ய மொழிபேசும் மக்களை கொண்டன. இங்கு இயங்கும் ஆயுத குழுக்களுக்கு ரஷ்யாவே ஆயுதங்களையும், சலுகைகளையும் வழங்கி வந்தது.
மேற்கு நாடுகள் பூட்டினின் செய்கையை சர்வதேச சட்டங்களுக்கு முரண் என்று கூறினாலும், மேற்கு நாடுகளும் தமக்கு ஆதரவான பல நாடுகளில் உள்ள பிரிவினர் குழுக்களை ஆதரித்து இருந்துள்ளன. South Sudan, Kosovo, Kurdistan ஆகியன அவற்றுள் சில.
யுக்கிரைன் நேட்டோ அணியில் இணைக்கப்படக்கூடாது என்ற ரஷ்யாவின் வேண்டுகோளை மேற்கு நிராகரித்து வந்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா ஆகியன ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதிக்க உள்ளன. அந்த தடை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த முறுகல் நிலையால் எரிபொருள் போன்ற பொருட்களின் விலைகள் உயரலாம். ரஷ்யாவின் மேலே மேற்கு நாடுகளின் விமானங்கள் தடை செய்யப்படல், விமான பயணங்கள் தடைபடும், விளையும் அதிகரிக்கும்.
மேற்கு நாடுகளின் படைகள் சண்டையில் பங்கு கொண்டால் நிலைமை மேலும் உக்கிரம் அடையும்.