ரஷ்ய சனாதிபதி பூட்டினுக்கு எதிராக கிளிர்ச்சி செய்த Wagner Group என்ற ரஷ்ய தனியார் இராணுவத்தின் தலைவர் Yevgeny Prigozhin கிளர்ச்சியை கைவிட்டு சனிக்கிழமை அண்டை நாடான பெலரூஸ் (Belarus) சென்றுள்ளார். பெலரூஸ் பூட்டினின் நட்பு நாடு ஒன்று.
பெலரூஸ் சென்ற Wagner குழுவின் தலைவர் தனது படைகளிடம் கிளர்ச்சியை நிறுத்துமாறும் கூறியுள்ளார்.
Wagner குழு தலைவரான Yevgeny Prigozhin மீதான குற்றச்சாட்டுக்களையும் ரஷ்யா கைவிட்டு உள்ளது என்று கூறியுள்ளது. Wagner படைகளை ரஷ்ய படைகளுடன் இணையுமாறு முன்னர் ரஷ்யா கேட்டிருந்தது.
Wagner படைகள் ரஷ்யா சார்பில் வேறு பல நாடுகளிலும் யுத்தம் செய்கிறது. குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் Wagner படைகள் மறைமுகமாக இயங்குகிறது. அவற்றின் நிலை என்னவாகும் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.