கியூபாவில் தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் Social Media

ZunZuneo

Facebook மற்றும் Twitter போன்றதொரு social mediaவை கியூபாவில் ஆரம்பித்து அதன் மூலம் அத்தீவில் அரசியல் மாற்றங்களை கொண்டுவர அமெரிக்கா செய்த முயற்சி ஒன்றும் தோல்வியில் முடிந்துள்ளது. The Associate Press தெரிவித்த இந்த தகவலை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

ZunZuneo என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த முயற்சி 2012 ஆம் ஆண்டில் முடிவடைந்த்துள்ளது. அமெரிக்காவின் Agency for International Development (USAID) என்ற நிறுவனத்தினால் $1.3 மில்லியன் செலவழித்து செய்யப்பட்ட இந்த முயற்சி 40,000 இற்கும் குறைவான கியூபவின் பிரசைகளை மட்டுமே கவர்ந்துள்ளது. ZunZuneo என்ற பதம் கியூபாவில் hummingbird இன் குரல் என்ற கருத்தை கொண்டது.

Alan Gross  என்ற அமெரிக்க USAID ஊழியர் கியூபாவுள் சட்டவிரோதமாக satellite மற்றும் தொலைதொடர்பு சாதனங்களை எடுத்துவர முயன்றபோது கைது செய்யப்பட்டு கியூபாவின் சிறையில் 15 வருட தண்டனையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Eisenhower முதல், Kennedy ஊடாக ஒபாமா வரை எல்லோருமே கியூபாவின் முயற்சிகளில் தோல்விகளை தழுவி உள்ளனர்.