இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு இருந்த விசேட உரிமை மோதி அரசால் இன்று பறிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக காஸ்மீர் நோக்கி இந்திய படைகள் நகர்ந்தது இந்த அறிவிப்பின் பின் கலகம் உண்டாகலாம் என்று கருதியே என்று தற்போது கூறப்படுகிறது.
.
இந்திய சட்டத்தின் பகுதியான Article 370 ஏனைய மாநிலங்களுக்கு இல்லாத சலுகைகளை காஸ்மீருக்கு வழங்கி இருந்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்தில் முஸ்லீம்களின் முன்னுரிமையை பாதுகாக்கும் நோக்கிலேயே 1949 ஆம் ஆண்டில் Article 370 வரையப்பட்டு இருந்தது.
.
Article 370 இன் படி பாதுபாப்பு, வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகியன தவிர்ந்த ஏனைய விசயங்களில் காஸ்மீர் அதிக சுதந்திரம் கொண்டிருந்தது.
.
இந்தியாவின் கட்டுப்பாட்டுள் உள்ள காஸ்மீரை இரண்டு பிரதேசங்களாக (territories) பிரிக்கும் நடவடிக்கையிலும் மோதி அரசு ஈடுபட்டுள்ளது.
.