காவிரி நீரால் பெங்களூர் முறுகளில்

காவிரி நீரால் பெங்களூர் முறுகளில்

காவிரி நீர் பங்கீடு காரணமாக மீண்டும் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் மீண்டும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதனால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியை செய்ய அழைத்துள்ளன.

பெங்களூரில் இன்று செவ்வாய்க்கிழமை மக்கள் பொது இடங்களில் கூடுவது போலீசாரால் தடை செய்யப்பட்டுள்ளது. வன்முறைகளை தடுக்க எடுக்கும் முன்கூட்டிய நடவடிக்கையே இது என்கிறது போலீஸ்.

Google, Walmart போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீடுகளில் இருந்து பணிய செய்ய கூறியுள்ளது. பெங்களூரில் சுமார் 3,500 சிறிய, பெரிய அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

பெங்களூரில் ஒருவர் தான் தனது “இரத்தத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க தயார் ஆனால் நீரை வழங்க தயார் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் 1807ம் ஆண்டில் இருந்து அவ்வப்போது தலையெடுத்து வருகிறது. General Agreement of 1892 என்ற உடன்படிக்கையையும் அரசியல்வாதிகள் அவ்வப்போது கடைப்பிடியாது உள்ளனர். 2018ம் ஆண்டு Cauvery Water Management Authority (CWMA) விடுத்த பங்கீட்டு தீர்மானத்தையும் மத்திய அரசு நடைமுறை செய்யாது உள்ளது.

செப்டம்பர் 13ம் திகதி முதல் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் விடுத்த அழைப்பையும் கர்நாடகா நடைமுறை செய்யவில்லை.

தமிழ்நாடு 354,000 லிட்டர் நீரை கேட்டுள்ளது என்றும் ஆனால் தாம் 142,000 லீட்டர் நீரையும் வழங்க முடியாது உள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் ஆரம்பிக்கும் காவிரி தமிழ்நாடு ஊடே சென்று வங்க கடலில் விழுகிறது.