மத்திய கிழக்கின் சிறியதோர் நாடான கட்டார் (Qadar) சவுதி அரேபியாவுடன் மட்டுமே சிறிய நிலப்பரப்பால் இணைந்துள்ளது. அந்த கட்டார்-சவுதி எல்லையோரம் கால்வாய் ஒன்றை தோண்டி, கட்டாரை ஒரு தீவாக்கி பிரிக்க முனைகிறது சவுதி அரசு. கட்டார் மீது சவுதி இந்த காழ்ப்பை கொள்ள காரணம், கட்டார் சவுதியின் எதிரியான ஈரானுடன் நலமான உறவுகளை கொண்டிருப்பதே.
.
Saud al-Qahtani என்ற சவுதியின் ஆலோசகர் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து ஒன்றே இந்த திட்ட உண்மையை உறுதியாகி உள்ளது.
.
சுமார் 60 km நீளம் கொண்ட இந்த எல்லையோர கால்வாய் 200 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த கால்வாய் அமைப்புக்கு சுமார் $750 மில்லியன் செலவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
.
2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், சவுதி தலைமையில், சவுதி, UAE, Bahrain, Egypt ஆகிய நாடுகள் கட்டார் மீது தடைகளை விதித்து, தமது நாடுகளில் இருந்த கட்டார் நாட்டவரை வெளியேற்றி, Qatar Airlines தமது நாடுகள் மேலால் பறப்பதை தடையும் செய்திருந்தன.
.
கட்டாருக்கு ஆதரவான முக்கிய நாடுகளாக ஈரானும், துருக்கியும் உள்ளன. அண்மையில் அமெரிக்காவின் புதிய வரிகளால் துருக்கியின் நாணயம் வீழ்ச்சி அடைந்த போது கட்டார் துருக்கியில் $15 முதலீட்டை செய்ய முன்வந்திருந்தது.
.