இன்று புதன்கிழமை தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை தடுக்கும் நோக்கில் பெருவின் (Peru) சனாதிபதி Pedro Castillo, வயது 53, அந்த நாட்டு காங்கிரசை இன்று கலைத்து இருந்தார். ஆனாலும் அவருக்கு எதிரான போராட்டம் வலுமை பெற, சனாதிபதி கைது செய்யப்பட்டு உள்ளார். அத்துடன் முன்னாள் உதவி சனாதிபதி புதிய சனாதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சனாதிபதியின் அறிவிப்பையும் மீறி இடப்பெற்ற நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு 101 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளது. தீர்மானத்துக்கு எதிராக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அத்துடன் 10 உறுப்பினர் வாக்களிக்கவில்லை. உடனடியாக முன்னாள் உதவி சனாதிபதி Dina Boluarte சனாதிபதி ஆனார்.
Castillo காலையில் காங்கிரசை கலைத்த பின் பல அமைச்சர்கள் பதவி விலகி இருந்தனர். போலீசும், இராணுவமும் கூடவே Castillo நடவடிக்கையை கண்டித்தன.
Castillo முதல் இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்புகளில் தப்பி இருந்தவர்.
Boluarte, வயது 60, பெருவின் முதலாவது பெண் சனாதிபதியாகிறார். இவர் Castillo செயலை இராணுவ கவிழ்ப்பு என்று சாடி இருந்தார்.