மகாத்மா காந்தியின் சாம்பலை அவரது 150 ஆவது பிறந்த தினத்தன்று இனம் தெரியாதோர் திருடி விட்டனர் என்று காந்தியின் நினைவாலயம் அறிவித்து உள்ளது. திருடியவர்கள் நினைவாலயத்தில் இருந்த காந்தியின் உருவ படத்தில் துரோகி என்றும் எழுதிவிட்டு சென்றுள்ளனர். இந்து-இஸ்லாம் இணக்கத்தை போதித்த காந்தியை இந்துவாதி ஒருவர் 1948 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்திருந்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள Rewa என்ற நகரத்து போலீசார் இந்த செய்தியை உறுதி செய்துள்ளனர்.
.
காந்தியின் மரணத்தின் பின் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டு இருந்தாலும், அவரின் சாம்பல் எல்லாம் ஆற்றில் தூவப்படவில்லை. அவரின் சாம்பல் மேற்கூறப்பட்ட நினைவாலயம் உட்பட பல இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன.
.
இந்தியாவில் தற்போதைய பா. ஜ. கட்சி இந்து வாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக வளர்த்து வருகின்றது. சில இந்துவாத உறுப்பினர் சட்டத்தை தம் கையிலும் எடுத்துள்ளார்.
.
இந்த நிலையத்தில் வீடியோ கண்காணிப்பு இருந்தன என்றும் கூறப்படுகிறது. போலீசார் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று நினைவாலயம் கூறியுள்ளது.
.